உலகளாவிய பசி அட்டவணை - இந்தியாவிற்கு 101வது இடம் அளிப்பு

உலகளாவிய பசி அட்டவணை வரிசையில் இந்தியாவை 101ஆவது இடத்திற்கு தரம் இறக்கியதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது....
உலகளாவிய பசி அட்டவணை - இந்தியாவிற்கு 101வது இடம் அளிப்பு
x
ஜெர்மனியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான WHH அமைப்பு உலக நாடுகளில் பசி அளவு பற்றிய அட்டவணை ஒன்றை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 2021க்கான அட்டவணையில், இந்தியா 101 இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது. 2020இல் இந்தியா 94ஆவது இடத்தை பெற்றிருந்தது.

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய கழகத்தின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.


நான்கு கேள்விகளை கொண்ட கருத்துக் கணிப்பு ஒன்றை தொலைபேசி மூலம் நடத்தி அதன் மூலம் இந்த அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இது விஞ்ஞான பூர்வமான ஆய்வு முறை அல்ல என்று கூறியுள்ளது. 

கொரோனா தொற்றுதல்கள் ஏற்பட்ட காலங்களில், மத்திய அரசு முன்னெடுத்த மிகப் பெரிய உணவு தானிய விநியோக திட்டத்தை இந்த ஆய்வு முற்றிலும் புறந்தள்ளியதாக
மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில், மத்திய அரசிடம் இருந்தும், இதர அமைப்புகளிடம் இருந்தும் உணவு தானிய உதவி கிடைத்தா என்று ஒரு கேள்வி கூட யாரிடமும் கேட்க்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்க தேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்புகளினால் பொது மக்களுக்கு வருமான இழப்பு, வேலை இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும்,
அந்நாடுகளில் இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களின் விகிதம் குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இது எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது எனவும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்