அக். 20இல் ஆப்கன் பற்றி ரஷ்யாவில் மாநாடு - தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

தலிபான் அமைப்பினருடன் ரஷ்யாவில் நடக்க உள்ள பேச்சு வார்த்தைகளில் இந்தியாவும் பங்கேற்க உள்ளது
அக். 20இல் ஆப்கன் பற்றி ரஷ்யாவில் மாநாடு - தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை
x
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறிய உடன், ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆகஸ்ட் 15இல், தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானியர்கள் வெளியேறினர். தலிபான் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. தற்போது கடுமையான உணவு தடுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியை ஆப்கானிஸ்தான் எதிர் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது ரஷ்யாவின் தூதரகம் மட்டும் செயல்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பற்றி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில், 11 நாடுகளின் மாநாடு ஒன்று அக்டோபர் 20இல் நடைபெற உள்ளது.  ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. இந்த கூட்டத்தில் தலிபான் இயக்கத்தின் பிரதிநிதிகளும் முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு, ரஷ்யா அழைப்பு விடுத்த பின், இந்தியாவும் இந்த பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள உள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை
அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி தெரிவித்தார். வெளியுறவுத் துறை அமைச்சரகத்தின் இணைச் செயலாளர் இதில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில், கட்டாருக்கான இந்திய தூதுவர் தீபக் மிட்டால், தோஹாவில், தலிபான்களின் பிரதிநிதிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்