பிரம்மாண்ட மரப்பாச்சி பொம்மை - பாரிஸ் வந்தடைந்த "லிட்டில் அமல்"

அகதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு 8 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரம்மாண்ட மரப்பாச்சி பொம்மை பாரிஸ் வந்தடைந்தது.
பிரம்மாண்ட மரப்பாச்சி பொம்மை - பாரிஸ் வந்தடைந்த லிட்டில் அமல்
x
அகதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு 8 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரம்மாண்ட மரப்பாச்சி பொம்மை பாரிஸ் வந்தடைந்தது. சிரிய அகதி குழந்தையைப் போன்ற தோற்றமுடைய இந்த மரப்பாச்சி பொம்மை பதினொன்றரை அடி உயரமுடையது. இது சிரிய எல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் துவங்கியது. ரோம், ஜெனீவா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்ற லிட்டில் அமல் என்று பெயரிடப்பட்ட இந்த ராட்சத மரப்பாச்சி பொம்மை, தற்போது பாரிஸ் வந்தடைந்துள்ளது. லிட்டில் அமலை குழந்தைகளும் பொதுமக்களும் வெகுவாக ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்