மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி - வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்த சூறாவளி

மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்தது.
மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி  - வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்த சூறாவளி
x
மெக்சிகோவை புரட்டிப்போட்ட பமீலா சூறாவளி வெப்ப மண்டலப் புயலாக வலுவிழந்தது. சினலோவா மாநிலத்தை வெகுவாக பாதித்த பமீலா சூறாவளி வகை 1 என வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அது வெப்ப மண்டலப் புயலாக பின்னர் வலுவிழந்ததாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் இருந்தது. பல கட்டடங்களில் புயலால் கண்ணாடிகள் உடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்