யார் இந்த சபேசன்?- திடுக்கிடும் பின்னணி தகவல்கள்
பதிவு : அக்டோபர் 14, 2021, 08:25 AM
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த கபிலனுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சபேசன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு மாற்றப்பட்டு ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுரேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களின் 7 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக  வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரில் தங்கி இருந்த சத்குணம் என்கிற சபேசன் என்ற இலங்கை தமிழர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் செல்போன், சிம் கார்டுகள், டேப்லட் உள்ளிட்ட 7 டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்த உடந்தையாக செயல்பட்டவரும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சிக்காக பணியாற்றி வருபவருமான இலங்கை தமிழர் சத்குணம் என்கிற சபேசனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து நடத்தினர். 

உலகம் முழுவதும் ஒரு அரசுக்கு எதிராகவோ, ஒரு நாட்டிற்கு எதிராகவோ  அந்த நாட்டிற்குள்ளேயே போராட்டம் நடத்தும் குழுவினருக்கு நிதி ஆதாரம் தேடித் தருவது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் தான். 

இதில் போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலை கையிலெடுத்த விடுதலை புலிகள், அந்த கடத்தல்களை தமிழகம் மூலம் விரிவுபடுத்தவும் தமிழகத்திலிருந்து செயல்படுத்தவும் அனுப்பி வைக்கப்பட்ட நபர்தான் சபேசன்.

இளமைக் காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பல வருடம் பணியாற்றிய சபேசன் முக்கிய பொறுப்புகளில் பங்காற்றி படிப்படியாக உயர்ந்துள்ளார். விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறையின் பொறுப்பாளரான பொட்டு அம்மானுக்கு அடுத்தகட்ட பொறுப்பாளராக இருந்த கபிலன் என்பவருக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக சபேசன் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2005ல் தமிழகம் வந்த சபேசன், அப்போது கைதாகி 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். பின் 2010ல் வெளியே வந்த அவர், கடந்த 11 ஆண்டுகளாக தமிழக போலீசார் கண்களில் படாமல் சாதாரண தொழில் செய்து வருவது போல் காட்டிக்கொண்டு கடத்தல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில் தங்கி பணப்பரிவர்தனை நிறுவனத்தை நடத்திகொண்டே பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போதை பொருட்களை கடத்தி அதன் மூலம் ஆயுதங்களை கைமாற்றி இலங்கைக்கு ஆயுதமாகவும் பணமாகவும் அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

இதுதொடர்பான வங்கி விபரங்களை சேகரித்துள்ள என்ஐஏ அதிகாரிகள் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
மேலும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவதற்கும், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் சபேசன் தீவிரமாக ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. 

சபேசனின் கூட்டாளி ஒருவர் தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு கட்சிகள் சிலவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சபேசனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ள போதிலும் அவர்கள் சபேசனை பிரிந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றனர். 

தான் எந்த வித குற்ற செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், தனியாக தொழில் செய்து வருவதாக, க்யூ பிரிவு போலீசார் மற்றும் சென்னை சட்ட ஒழுங்கு போலீசாரை நம்ப வைத்து  கடத்தல் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

396 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

98 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

53 views

"மோசடி பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்" - பொதுமக்களை எச்சரித்த சென்னை காவல் ஆணையர்

குலுக்கல் முறையில் பரிசு, வங்கியில் வேலை என விதவிதமாக கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

17 views

பிற செய்திகள்

"விரைவில் செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்படும்" - சென்னை துறைமுக தலைவர் தகவல்

மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தின் மூலம் ரயில்வே, துறைமுகம், நீர் வழி போக்குவரத்து, சாலை போக்குவரத்து உட்பட 16 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று துறைமுகத் தலைவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

2 views

குடியரசு தலைவர் காஷ்மீர், லடாக் பயணம்: இன்று லடாக் செல்கிறார் குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

0 views

பூக்கள் விலையேற்றம்... பொதுமக்கள் அதிர்ச்சி - திடீர் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், இன்று மூன்று மடங்கு வரை அதிக விலையில் பூக்கள் விற்பனையாகின. இதற்கான காரணம் என்ன?

13 views

தமிழகத்தில் மேலும் 1,280 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

10 views

அமெரிக்கா செல்ல கனடா, மெக்சிகோ எல்லைகளில் தளர்வு

மெக்சிகோ, கனடா எல்லைகளை கடந்து அமெரிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த உள்ளது.

13 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற வழக்கு : தீர்ப்பு ஏமாற்றம் - உத்ராவின் தாயார்

கேரளாவில் விஷப்பாம்பை ஏவி மனைவியை கொலை செய்த வழக்கில், குற்றவாளி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.