உலகின் முதல் மலேரியா தடுப்பூசி - WHO அங்கீகாரம் அளித்தது

உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுனம் அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி - WHO அங்கீகாரம் அளித்தது
x
பிரட்டனைச் சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மிக்கிளைன் (Glaxo SmithKline)  நிறுவனம் உருவாக்கியுள்ள மஸ்கியுரிக்ஸ் (Mosquirix) என்ற மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் புதன் அன்று அங்கீகாரம் அளித்துள்ளது. பிறந்து 6 வாரம் முதல் 17 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு, மலேரியாவில் இருந்து பாதுகாப்பு அளிக்க, இந்த தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நான்கு டோஸ்கள் கொண்ட இந்த தடுப்பூசியின் முதல் மூன்று டோஸ்கள், ஒரு மாத இடைவெளியில், தொடைகள் அல்லது தோள்பட்டைகளில் செலுத்தப்படுகிறது.  மூன்றாவது டோஸ் அளிக்கப்பட்ட பின், 18 மாதங்கள் கழித்து, நான்காவது டோஸ் அளிக்கபடுகிறது. ஒரு டோஸின் அளவு 0.5 மில்லி லிட்டர் ஆகும். ஆப்பரிக்காவில் மலேரியா நோய்க்கு எதிராக இந்தத் தடுப்பூசி பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்