பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - 20 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்

பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - 20 பேர் பலி ஏராளமானோர் படுகாயம்
x
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். ஒரு பெண்மணியும், அவரின் ஆறு குழந்தைகளும் இதில் உயிரிழந்ததாக மாகாண அரசின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகள் வீரியம் கொண்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஹர்னை என்ற நகர் மிக அதிகமாக சேதமடைந்துள்ளது. அங்கு சுமார் 100 மண் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளன. பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு
அழைத்துச் செல்ல, ராணுவ ஹெலிக்காப்டர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் இருந்து 102 கிலோ மீட்டர் கிழக்கே உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்