"2025இல் தைவானை சீனா ஆக்கிரமிக்கும்" - தைவான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

2025இல் தைவான் மீது சீனா படை எடுக்க வாய்ப்புள்ளதாக தைவான் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
2025இல் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் - தைவான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
x
கடந்த சில ஆண்டுகளாக சீனா, தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. ஏராளமான போர் கப்பல்கள், ராணுவ தளவாடங்கள்,  ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது.  இந்நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 150 சீன போர் விமனங்கள் தைவான் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்துள்ளதாக தைவான் கூறியுள்ளது.

2025க்குள் தைவான் மீது சீனா படை எடுக்கும் என்று தைவான் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ செங் (Chiu Kuo-cheng)  நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த போது கூறினார். சீனா, தைவான் உறவுகள் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

2025க்குள் சீனாவின் ராணுவ பலம் வெகுவாக அதிகரித்து, படை எடுப்பினால் ஏற்படும் சேதங்களை வெகுவாக குறைக்கும் ஆற்றலை பெற்று விடும் என்று
அவர் கவலை  தெரிவித்துள்ளார்.

சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை பாதுகாக்க, அமெரிக்கா, பிரட்டன், ஆஸ்த்ரேலியா ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்தியா, ஜப்பான், ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குவாட் கூட்டமைப்பு,  தைவானை பாதுகாக்க கூட்டு ராணுவ ஒத்திகைகளை வருடம் ஒருமுறை நடத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்