இந்தியாவின் கோவிஷீல்ட், சீனாவின் சினோவேக் - தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலியா அங்கீகாரம்
பதிவு : அக்டோபர் 01, 2021, 06:06 PM
இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் சீனாவின் சினோவேக் தடுப்பூசிகளுக்கு ஆஸ்த்ரேலியா அங்கீகாரம் அளித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய தீவு நாடானா ஆஸ்த்ரேலியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த பின், வெளிநாட்டினர் ஆஸ்த்ரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள மிகக் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டது. 64 சதவீத மக்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்த்ரேலியாவிற்கு செல்லவதற்கான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தபட உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கும், சீனாவின் சினோவேக் தடுப்பூசிக்கும் ஆஸ்த்ரேலிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் விளைவாக, ஆஸ்த்ரேலியாவில் உயர் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான இந்தியா மற்றும் சீன மாணவர்கள் மீண்டும் ஆஸ்த்ரேலியாவிற்கு செல்ல வழி பிறந்துள்ளது. ஆஸ்த்ரேலியாவில் உயர் கல்வி பயிலும் சுமார் 57,000 வெளிநாட்டு மாணவர்கள் தற்போது தங்கள் சொந்த நாட்டில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இருந்து ஆஸ்த்ரேலியாவின் எல்லைகளை திறக்க போவதாக ஆஸ்த்ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். இதன் மூலம் ஆஸ்த்ரேலியாவிற்கும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள மோதல்கள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


பிற செய்திகள்

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

48 views

சர்வதேச சமையல் - மெக்சிகன் ஃபஜிடாஸ்:பீடா ஸ்டைலில் உருவாகும் மாமிச உணவு

மெக்சிகோன்னாலே அது சமையலுக்கு பேர் போன நாடு. அந்த நாட்டு ஸ்டைல்ல சிக்கன் Fajitas எப்படி செய்யிறதுனுதான் நாம கத்துக்கப் போறோம்... இன்னைக்கு சர்வதேச சமையல் பகுதியில...

9 views

நான்கு காதுகள் கொண்ட அதிசயப் பூனை - இணையத்தில் வைரலாகும் சேட்டை

இந்த பூனைங்க இருக்கு பாருங்க... சின்ன சத்தம் வந்தாலே டக்குனு முழிச்சு பாத்துடுங்க... அதுங்க காது அவ்ளோ ஷார்ப்பு. ரெண்டு காது இருக்குற பூனைங்களே அப்படின்னா நாலு காது இருக்குற பூனை எப்டி இருக்கும்? வாங்க அந்த நாலு காது பூனையையும் மீட் பண்ணலாம்...

10 views

ஹஸ்பெண்ட் என்றால் என்ன அர்த்தம்? கணவர் - கால்நடை பராமரிப்பு... என்ன தொடர்பு?

வார்த்தைகளுக்கு பின்னால இருக்குற வரலாறை எல்லாம் தோண்டி எடுக்குற நாம ஒவ்வொரு வீட்டுலயும் அப்பிராணியா வாழுற இந்த ஹஸ்பெண்டுகளை விட்டு வைப்போமா? வாங்க ஹஸ்பென்டுங்கற அந்த வார்த்தையை பிரிச்சி மேயலாம்...

115 views

வேகமாக பரவும் பி.1.1.529 வகை கொரோனா - உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பிரிட்டனில், 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவித் தெரிவித்து உள்ளார்.

15 views

அச்சத்தை ஏற்படுத்தும் ஒமிக்ரான்: "அதீத எச்சரிக்கையுடன் இருங்கள்" - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றை அதிக எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

421 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.