சர்வதேச அளவில் சிறந்த படங்கள் : கர்ணன் - நியூயார்க் டைம்ஸ் அங்கீகாரம்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், சிறந்த 5 வெளிநாடு படங்களின் வரிசையில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து செய்தி தொகுப்பை பார்க்கலாம்.....
சர்வதேச அளவில் சிறந்த படங்கள் : கர்ணன் - நியூயார்க் டைம்ஸ் அங்கீகாரம்
x
வெளியாவதற்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. ரிலீசான பின்பு சர்வதேச அளவில் அங்கீகாரம்.. இப்படி, ரிலீசாகி 5 மாதங்கள் ஆன பின்பும் பேசுபொருளாகவே இருந்து வரும் படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன். அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு கர்ணன் படம் தேர்வான நிலையில், தற்போது அமெரிக்காவின் புகழ்பெற்ற "தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் இந்த படத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. மாதந்தோறும் 5 சிறந்த சர்வதேச படங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கும் நியூயார்க் டைம்ஸ், இந்த முறை கர்ணனை சிறந்த சர்வதேச படமாக அங்கீகரித்து பரிந்துரை செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் பொடியன்குளம் என்ற கிராமத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அவதிப்படுவது, இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பது, மருத்துவமனை செல்வதில் சிக்கல் என அந்த கிராமத்தில் அரங்கேறிய ஒடுக்குமுறையை கர்ணன் படம் மிக விரிவாக பேசியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. படத்தின் ஆரம்ப காட்சியில் மீனை வெட்டுவது போன்ற விளையாட்டில் கதாநாயகன் பாய்ந்தபடி, மிக துல்லியமாக வெட்டும் காட்சிகள் தரமானவை எனவும் சிலாகித்துள்ளது. இப்படி 90களில் நடந்த உண்மை சம்பவத்தை, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளதாகவும், தமிழ் சூப்பர் ஸ்டார் தனுஷ், கர்ணன் பாத்திரத்தில் அட்டகாசமாக நடித்துள்ளதாகவும் புகழ்ந்துள்ளது "தி நியூயார்க் டைம்ஸ்".

இப்படி அடுத்தடுத்து சர்வதேச அளவில் கர்ணன் படத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்