இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு - அமெரிக்காவில் முதலீடு செய்யும் ஃபோர்டு

போர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகள் இந்தியாவில் மூடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவில் புதிய தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய உள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு - அமெரிக்காவில் முதலீடு செய்யும் ஃபோர்டு
x
சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள கார் தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மூட உள்ளதாக போர்டு நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் விளைவாக இந்தத் தொழிற்சாலைகளில் பணி புரியும் பல ஆயிரம் பேர் தொழிலாளர்கள் வேலை இழக்க உள்ளனர். இந்திய சந்தையில் போட்டியிட முடியாமல், தொடர் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதால் இங்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில், இரண்டு மாகாணங்களில் மின்சார டிரக்குகள், மின்சார கார்கள், பேட்டரிகள் தயாரிக்க, 84,496 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பேட்டரிகளை  உற்பத்தி செய்ய, எஸ்.கே.ஐ நிறுவனத்துடன் கூட்டாக ஈடுபட உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் 11,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அவற்றை இயக்க தேவையான பேட்டரிகள் உற்பத்தி பெரிய அளவில் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. கென்ட்டக்கி மாகாணத்தில் மின்சார வாகன பேட்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று 42,989 கோடி ரூபாயில் தொடங்கப்பட உள்ளது. இந்த இரண்டு தொழிற்சாலைகள் 2025இல் உற்பத்தியை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இத்துடன் போட்டியிட போர்டு உள்ளிட்ட இதர நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்