பிரிட்டனில் டேங்கர் ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை - வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பு
பதிவு : செப்டம்பர் 26, 2021, 04:08 PM
பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரட்டன் வெளியேறிய பின், பிரிட்டனில் லாரி ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் பல மாதங்களாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், துறைமுகங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் அனுப்பபடுகிறது.

 ஆனால், டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் காத்திருக்கின்றன. சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. 

டேங்கர் ஓட்டுனர்கள் பற்றாகுறையை சமாளிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த டேங்கர் ஓட்டுநர்களுக்கு, 5,000 தற்காலிக விசாக்களை அளிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் ஒரு லட்சம் கனரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதாக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் பங்குகளை நடத்தி வரும் இ.ஜி குழுமம், வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 30 பவுண்டுகள் மதிப்பிலான பெட்ரோல் 
மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

பிரிட்டனில்  உணவு பொருட்கள் உள்ளிட்ட இதர பண்டங்களின் விநியோகத்தையும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை, பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

856 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

170 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

58 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

40 views

பிற செய்திகள்

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல் - ஒரு பெண் உட்பட 14 பேர் பலி

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதலால் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 views

இத்தாலியைத் தாக்கிய புயல் - சீரமைப்புப் பணிகளில் மக்கள்

இத்தாலியின் கடானியா பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

0 views

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 views

மீண்டும் சொந்த நாடு திரும்பிய சிற்பத்தால் நைஜீரியர்கள் மகிழ்ச்சி

பிரிட்டிஷ் துருப்புகளால் கொண்டு செல்லப்பட்ட வெண்கல சிற்பம் மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளதால் நைஜீரிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 views

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி - நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட புலி பத்திரமாக நெதர்லாந்திற்கு கொண்டு வரப்பட்டது.

2 views

புவி வெப்பமயமாதல் விளைவு - சுவிட்சர்லாந்தில் உருகும் அழகிய ரோன் பனியாறு

சுவிட்சர்லாந்தில் உள்ள பனியாறு ஒன்று புவிவெப்பமயதாலினால் வெகுவாக சுருங்கியுள்ளது.

158 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.