செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: நாசா அனுப்பிய லேண்டர் ஆராய்ச்சியில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு இடைவிடாது நில அதிர்வு உணரப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள தகவல் என்ன? விரிவாக பார்ப்போம்..
செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: நாசா அனுப்பிய லேண்டர் ஆராய்ச்சியில் தகவல்
x
இந்த LANDER கருவி, கடந்த 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆயிரமாவது நாளை நிறைவு செய்தது.

இதனை குறிப்பிட்டு நாசா வெளியிட்ட செய்திக்குறிப்பில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், செவ்வாய் கிரகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு இடைவிடாது MARSQUAKE எனப்படும் நில அதிர்வு ஏற்பட்டதாக INSIGHT LANDER கருவி மூலம் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளது.

லேண்டர் அமைந்துள்ள இடத்தில் இருந்து சுமார் 8,500 கிலோ மீட்டர் தொலைவில் 4 புள்ளி இரண்டு ரிக்டரில் நில அதிர்வு பதிவானது



ஆனால் இது புதிதல்ல, இதே INSIGHT LANDER கருவி, கடந்த 2019 ஆம் ஆண்டில் 3.7 ரிக்டரில் நில அதிர்வை கண்டறிந்தது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி 4.2 மற்றும் 4.1 என அடுத்தடுத்து நில அதிர்வுகளை கண்டறிந்தது. அதுவும் இந்த நில அதிர்வு லேண்டர் கருவி இருக்கும் இடத்தில் இருந்து 925 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..

இந்த சூழலில், அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நில அதிர்வுகள் உணரப்படுவதால், செவ்வாய் கிரகத்தை பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்க வழிவகுத்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்