இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
x
பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி தமக்கும் தமது குழுவினருக்கும் வரவேற்பு அளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
 
நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் அடி எடுத்து வைக்கும் நேரத்தில், இருதரப்பு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர்


இந்த தசாப்தம் எப்படி வடிவமைக்கப்பட போகிறது என்பதில் உங்களின் தலைமை மிக முக்கிய பங்கு வகிக்கப் போவதாக பைடனுக்கு பாராட்டு தெரிவித்தார்.


கொரோனா பெருந்தொற்று, பருவநிலை மாற்றம் குவாட் மாநாடு உள்ளிட்டவற்றில் பைடனின் முயற்சி மெச்சத்தக்கது என குறிப்பிட்டார்.
 

வருகின்ற தசாப்தத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் வர்த்தகம் முக்கிய காரணியாக இருக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.


மேலும் இரு தலைவர்களும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் பேசியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வேறு எந்த பயங்கரவாத அமைப்புகளுக்கான புகலிடமாகவும் ஆப்கானிஸ்தான் பயன்படவில்லை என்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.


மேலும் ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் தலையீடு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பைடன், மோடி ஆகியோர் கவலை தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.


மேலும் இந்தியாவுக்கு வருமாறு பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகவும், அழைப்பு குறித்து பைடன் மகிழ்ச்சி  தெரிவித்தாக கூறிய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்ளா,


இருதரப்பு வசதிக்கேற்ப மிகவிரைவில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக கூறினார்.  



Next Story

மேலும் செய்திகள்