ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு : இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்த்தை
பதிவு : செப்டம்பர் 24, 2021, 05:53 PM
மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதற்கு முன்பு 2014இல், ஒபாமா அரசில், துணை அதிபராக ஜோ பைடன் பணியாற்றிய போது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். இந்த ஆண்டில் பல முறை தொலைபேசி மூலம் இருவரும் உரையாடியுள்ளனர். இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் விருந்தளிக்கிறார். அதன் பின்னர் இருவரும், இந்திய அமெரிக்க உறவுகள் பற்றி விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளார் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) கூறியிருந்தார். இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் கூட்டு முயற்சிகளை பலப்படுத்துதல், தூய்மை எரிசக்தித் துறையில் கூட்டு முயற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தொழில்த்துறை இணைப்புகள் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து குவாட் நாடுகளின் தலைவர்களுடன் நடக்கும் உச்சி மாநாட்டில் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதில் ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர் கொள்ளுதல், சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விசியங்கள் விவாதிக்கப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் - மத்திய அரசின் அனுமதிக்கு சீமான் எதிர்ப்பு

கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

64 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

46 views

பிற செய்திகள்

2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் - பணியாளர்களுக்கான அதிகாரப்பூர்வ சீருடை

பெய்ஜிங் 2022 ஒலிம்பிக்கில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கான சீருடை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

0 views

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் - பாதுகாப்பான சூழலை உருவாக்க கார்ன்வால் சீமாட்டி கெமிலா வலியுறுத்தல்

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கெமிலா, பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

0 views

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதல் - ஒரு பெண் உட்பட 14 பேர் பலி

ஈராக்கில் பயங்கரவாத தாக்குதலால் பலியானவர்களின் இறுதிச் சடங்குகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

11 views

இத்தாலியைத் தாக்கிய புயல் - சீரமைப்புப் பணிகளில் மக்கள்

இத்தாலியின் கடானியா பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

0 views

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 views

மீண்டும் சொந்த நாடு திரும்பிய சிற்பத்தால் நைஜீரியர்கள் மகிழ்ச்சி

பிரிட்டிஷ் துருப்புகளால் கொண்டு செல்லப்பட்ட வெண்கல சிற்பம் மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளதால் நைஜீரிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.