லா பால்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு

ஸ்பெயின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியதால் நெருப்புக் குழம்பு தொடர்ந்து வெளியேறி வருகிறது.
லா பால்மா எரிமலை வெடிப்பு - தொடர்ந்து வெளியேறும் நெருப்புக் குழம்பு
x
வடமேற்கு ஆப்பிரிக்க கரையை ஒட்டி இருக்கும் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வெடித்துச் சிதறியது. இதனால், கரும்புகை சில கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு மேலெழும்பி பரவின. கடந்த 50 ஆண்டுகளில் 2வது முறையாக லா பால்மா எரிமலை வெடித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பிற்குள்ளாகப் போகும் இடங்களில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. 190க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததுடன், பல்லாயிரக்கணகான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலைக் குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கும் போது நச்சு வாயுக்கள் வெளியாகலாம் என்று புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்