கனடா நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி
பதிவு : செப்டம்பர் 23, 2021, 08:12 PM
கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் இந்தியர்களின் வெற்றி குறித்து விரிவாக பார்ப்போம்
ஆட்சிகாலம் முடிவடைய 2 ஆண்டுகள் மீதமிருக்க, கொரோனா நெருக்கடி சமயத்திலும், ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ..தனிபெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவைப்படும் நிலையில், லிபரல் கட்சியால் 156 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது
இதனால் நெருக்கடியான நிலையிலேயே மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார் ஜஸ்டின் ட்ருடோ..இந்த தேர்தலில் 3 அமைச்சர்கள் உட்பட 49 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.இந்திய வம்சாவளி மக்கள் சுமார் 16 லட்சம் பேர் வசிக்கும் சூழலில், தேர்தல் முடிவுகளின்படி 17 பேர் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 17ல் 16 பேர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஜஸ்டின் ட்ருடோவின் அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜன்(harjit sajjan), வான்கூவர் தெற்கு(Vancouver South) தொகுதியில் 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.பெண் அமைச்சர்களான பர்திஷ் சாக்கர்(Bardish Chaggar) வாட்டர்ளூ(WATERLOO) தொகுதியில் 44.8 சதவீத வாக்குகளுடனும், அனிதா ஆனந்த் ஆக்வில்லா தொகுதியில் சுமார் 46 வாக்குகளுடனும் வெற்றி பெற்றனர்.அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாப்பையும் பூர்வீகமாக கொண்டவர்கள்.லிபரல் கட்சிக்கு எதிர்த்து பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சி தலைவரான ஜக்மீத் சிங்(Jagmeet Singh,) சுமார் 40 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சந்திரகாந்த் ஆர்யா, நேப்பியன் தொகுதியில் வெற்றி பெற்றார்.இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சிகளையும் சேர்த்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.2019ம் தேர்தலில் இந்திய வம்சாவளியில் இருந்து 20 பேர் எம்.பியான நிலையில், இந்த முறை 17ஆக குறைந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?

சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

51 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

50 views

பிற செய்திகள்

சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 views

20 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் வைரஸ்

புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 20 நாடுகளில் கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 views

ஒமிக்ரான் மிக ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்..? - தென் ஆப்பிரிக்கா தரவுகள் சொல்வது என்ன...?

தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்...? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

1482 views

ஒமிக்ரான் உருவான தென் ஆப்ரிக்காவின் தற்போதைய நிலை என்ன?

தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுவது ஏன்...?

64 views

புதிய விதிமுறை ட்விட்டர் அதிரடி

மற்றவர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை இனி பகிர முடியாது என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது, ட்விட்டர் நிறுவனம். இது குறித்து கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்.

19 views

என்ன நடக்கிறது ஸ்வீடனில்? - அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள்

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.