உலகெங்கும் குறைந்து வரும் கொரோனா

உலக முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது
உலகெங்கும் குறைந்து வரும் கொரோனா
x
உலக முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. கடந்த வாரம் உலகம் முழுவதும் முப்பது லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது இதற்கு முந்தைய வாரம் பதிவான 40 லட்சம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குறைவாகும். ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு பிறகு உலகின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பது இதுவே முதல் முறை என்கிறது, உலக சுகாதார அமைப்பு. மத்திய கிழக்கு நாடுகளில் 22 சதவீதமும் தென் கிழக்கு நாடுகளில் 16 சதவீதமும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் கடந்த வாரம் 7 சதவீதம் குறைவாக 60 ஆயிரத்திற்கு குறைவாக இறப்பு பதிவாகியுள்ளது. தென்கிழக்கு நாடுகளில் இறப்பு விகிதம் 30 சதவீதம் குறைவாகவும், அதே சமயம் மேற்கு பசிபிக் பகுதியில் 7 சதவீதம் அதிகமாகவும் இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. பெரும்பாலான கொரோனா வைரஸ் பாதிப்புகள் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது 185க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பரவியுள்ள நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட லம்டா, மு வைரஸ் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்