உலக அளவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலக அளவில், டெல்டா ரக வைரஸ் இதா கொரோனா ரக வைரஸ்களை விட மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் ரகமாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் - உலக சுகாதார நிறுவனம் தகவல்
x
ஆல்பா, பீட்டா, காமா போன்ற இதர கவலையளிக்கு வைரஸ் ரகங்களை, டெல்டா ரக வைரஸ் வெகுவாக முந்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின்
தொழில்நுட்பத் தலைவர் மரியா வேன் கெர்கொவே (Maria Van Kerkhove) புதன் அன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதர கொரோனா வைரஸ்களை விட டெல்டா வைரஸ், வீரியம் கொண்டதாகவும், நீண்ட காலங்களுக்கு பரவும் திறன் கொண்டதாகவும் மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் தற்போது ஏற்படும் தொற்றுதல்களில் தலா ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் ஆல்பா, பீட்டா, காமா ரக வைரஸ்களினால் ஏற்படுவதாக கூறினார். தற்போது வரை, 185 உலக நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கவலையளிக்கும் ரகங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த ஆல்பா, பீட்டா, காமா ரக வைரஸ்கள், கண்காணிக்கப்படும் ரகங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. எடா, ஐயோடா, கப்பா ரக வைரஸ்களும் கண்காணிக்கப்படும் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. உலக அளவில் பொது சுகாதாரத்திற்கு இவற்றினால் இனி பெரிய ஆபத்து ஏற்படாது என்று கருதப்படுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்