தாய்லாந்தில் முடங்கிய டாக்சிகள் - கார்கள் மீது காய்கறிகள் தோட்டம்

தாய்லாந்தில் கொரோனா பாதிப்பினால் முடங்கியுள்ள வாடகைக் கார்களில் காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
தாய்லாந்தில் முடங்கிய டாக்சிகள் - கார்கள் மீது காய்கறிகள் தோட்டம்
x
சுற்றுலாத் துறையை பெருமளவில் நம்பியுள்ள தாய்லாந்தின் பொருளாதாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டதால், நூற்றுக்கணக்கான வாடகை கார்கள் ஓட்டம் இன்றி, முடங்கியுள்ளன.தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில் ஒரு வாடகை கார் நிறுவனத்திற்கு சொந்தமான 300 டாக்சி கார்கள், ஒரு திறந்தவெளியில் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டுள்ளன.இந்த கார்களின் கூரைகள் மற்றும் பேனட்கள் மீது பிளாஸ்டிக் ஷீட்களை பரப்பி, அவற்றின் மீது செம்மணை கொட்டு, காய்கறிகள் பயிரிடப்பட்டுகின்றன.வருமானமே இல்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுனர்களுக்கு இந்த காய்கறி தோட்டங்கள் மூலம் குறைந்தபட்ச வருவாய் கிடைப்பதாக இதன் நிர்வாகி கூறுகிறார்.ஏராளமான ஓட்டுனர்கள் கிராமங்களுக்கு சென்று விவசாய வேலைகள், மீன் பிடித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்தில் கொரோனா பரவல் ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டியது. இதுவரை அங்கு 21 சதவீதத்தினருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்