அமெரிக்காவில் நாடோடி வாழ்க்கை முறை - கொல்லப்பட்ட பெண் பதிவரின் உடல் மீட்பு

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தின் தேசிய பூங்காவில் செப்டம்பர் 19 அன்று கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் உடல், கேபி பெடிடோ என்ற இணைய தள பதிவரின் உடல் தான் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை எப்.பி.ஐ உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவில் நாடோடி வாழ்க்கை முறை - கொல்லப்பட்ட பெண் பதிவரின் உடல் மீட்பு
x
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தின் தேசிய பூங்காவில் செப்டம்பர் 19 அன்று கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் உடல், கேபி பெடிடோ  
என்ற இணைய தள பதிவரின் உடல் தான் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை எப்.பி.ஐ  உறுதி செய்துள்ளது. வேன் லைப்   என்ற நாடோடி வாழ்க்கை முறையில் ஈடுப்பட்டிருந்த 22 வயதான கேபி பெடிடோ , தனது காதலன் பிரையன் லான்ட்ரியுடன், ஒரு வேனில், அமெரிக்கா
முழுவதும் பயணம் செய்து வந்தார். செப்டம்பர் 11 முதல் அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும், அவர் காணாமல் போய் விட்டதாகவும், அவரின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், வயோமிங் தேசிய பூங்காவில் சிதைந்த நிலையில் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரின் காதலன் பிரையன் லான்ட்ரியை அமெரிக்க காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.









Next Story

மேலும் செய்திகள்