கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி

சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைத்து இங்கிலாந்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி
x
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான கொரோனா விதிமுறைகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டு இருந்தது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் மாடர்னா, ஃபைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.மேலும், இந்த தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு இங்கிலாந்து அனுமதி அளித்த நிலையில், அதே மூலக்கூறை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவிஷீல்டு தடுப்பூசியை அனுமதிக்கவில்லை என்றால், இங்கிலாந்து பயணிகளுக்கும் அதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்து புதிய பயண விதிகளை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்தியர்கள், இங்கிலாந்து வந்தடைந்த பின்னர் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்