ஸ்பெயின் எரிமலை வெடிப்பு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஸ்பெயின் எரிமலை வெடிப்பு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
x
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா பகுதியில் உள்ள எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். காற்றில் கரும்புகை மட்டுமல்லாது அபாய எச்சரிக்கை ஒலியும் கலந்த நிலையில், மக்கள் வீடுகளில் இருந்து உடமைகளை அவசவசரமாக வெளியேற்றிக் கொண்டிருந்தனர். மேற்குக் கடற்கரை பகுதிகளில் உள்ள பள்ளி உள்ளிட்ட்வற்றை எரிமலைக் குழம்புகள் எரித்து சாம்பலாக்கும் காட்சிகள் ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளன. எரிமலை வெடிப்பு கடலைத் தாக்கும் போது, உருகிய பாறைகள் வேகமாகக் குளிர்வடைய வாய்ப்புள்ளதால், நச்சு வாயுக்கள் உருவாவதுடன், மேக வெடிப்புகளும் நிகழலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்