விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?
x
இந்தோ-பசிபிக்கில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் விதமாக மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டமைப்பை அறிவித்துள்ளன. 

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ஆஸ்திரேலியாவின் படைப்பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆஸ்திரேலியா அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை பெறுவதற்கு உதவுவோம் என அமெரிக்காவும், பிரிட்டனும் அறிவித்துள்ளன. 

ஆயுத போட்டியை மோசமாக்கும்
சீனா எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் சீனா, ஆக்கஸ் கூட்டமைப்பு பிராந்திய அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கடுமையாக குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்றும் இது ஆயுத போட்டியை மோசமாக்கும் என்றும் சர்வதேச ஆயுத பரவல் தடுப்பு முயற்சிகளை கடுமையாக பாதிக்கிறது என்றும் விமர்சனம் செய்திருக்கிறது.
 
ரூ. 3.5 லட்சம் கோடி மதிப்பிலான பிரான்ஸ் - ஆஸ்திரேலியா ஒப்பந்தம் ரத்து 

சீனாவின் எதிர்ப்பு இயல்பானது என்றாலும், ஆஸ்திரேலியா நட்பு நாடான பிரான்சின் எதிர்ப்பை சம்பாதித்திற்பதற்கு மற்றொரு காரணம் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்காக 12 நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரான்ஸ் பெற்றிருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்