ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு
x
ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் ஆட்சி கைப்பற்றலுக்கு முன்பு வரை, மருந்து விநியோகம் தடையின்றி இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வெளியில் இருந்து மருந்துப் பொருட்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  நிதியுதவி அளிக்கும் நன்கொடையாளர்கள் தலிபான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்படாததால், நூற்றுக்கணக்கான மருந்து நிறுவனங்கள் அந்நாட்டில் மூடப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்