தைவானை அச்சுறுத்தும் சீனா - போர் பயிற்சியில் தைவான் ராணுவம்

தைவானில் நெடுஞ்சாலை ஒன்றில் போர் விமானங்களை தரை இறங்கச் செய்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது. விறுவிறுப்பும், பரபரப்புமாய் காட்சியளித்த
தைவானை அச்சுறுத்தும் சீனா - போர் பயிற்சியில் தைவான் ராணுவம்
x
சீனாவிற்கு அருகே உள்ள சிறிய தீவு நாடான தைவான், 1949 வரை சீனாவின் ஒரு அங்கமாக இருந்தது. சீனாவில் மாவோ தலைமையில் கம்யூச ஆட்சி ஏற்பட்ட பின், தனி நாடாக பிரிந்து, முதலாளித்துவ பாதையில் சென்று, வளர்ந்த நாடாக உருவெடுத்தது. கடந்த 70 ஆண்டுகளாக தைவானை சொந்தம் கொண்டாடும் சீனா, அதை கைப்பற்ற, கடந்த காலங்களில் செய்த முயற்சிகளை, அமெரிக்க ராணுவ உதவியுடன் தைவான் முறியடித்தது.

தைவானை கைபற்றி,  மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என்று சீனா தொடர்ந்து கூறி வருவதால், தைவானில் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. தைவான் மீது சீன ராணுவம் படை எடுத்தால், அதை சமாளிக்க தேவையான போர் ஒத்திகைகளில், தைவான் ராணுவம் புதன் அன்று ஈடுபட்டது. ஒரு நெடுஞ்சாலையில், தைவான் விமானப் படையின் போர் விமானங்கள் வெற்றிகரமாக, ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்கின. தைவான் அதிபர் சை இங் வென் இந்த ஒத்திகைகளை பார்வையிட்டு, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

தைவான் முழுவதும் ஒரு வார காலத்திற்கு நடைபெற உள்ள போர் ஒத்திகைகளில், தாக்குதல் நடத்தும் எதிரி நாட்டு வீரர்களை, தைவான் ராணுவ வீரர்கள் எதிர்கொள்வது பற்றி பயிற்சிகள் நடத்தப்பட்டன. சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தைவானை பாதுகாக்க, அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய குவாட் நாடுகளின் கூட்டமைப்பு தைவானிற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்