பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் - கடன்களை நிறுத்திய உலக வங்கி

ஆபாகானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வறுமை வெகுவாக அதிகரித்து வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் - கடன்களை நிறுத்திய உலக வங்கி
x
தலிபான்கள் வெற்றி பெற்ற பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்தியுள்ளன. சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி அளித்த கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கன் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 940 கோடி டாலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.  சர்வதே அளவில் தலிபான்களின் சொத்துகளை முடக்க, 39 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இவற்றின் விளைவாக ஆப்கானிஸ்தானில் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் தங்களின் வங்கி கணக்குகளில் இருந்து அதிகபட்சமாக 200 டாலர்கள் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் ஆப்கானியர்கள் உணவு பற்றாகுறையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா சபை, செவ்வாய் அன்று எச்சரித்தது. வறுமைக் கோட்டிற்கு கீழே 97 சதவீத மக்கள் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. பட்டினியை எதிர்கொண்டுள்ள குடும்பங்களுக்கு உதவிகள் அளிக்கவும், குளிர் காலத்தில் கோதுமை பயிரிடவும், கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கவும் 3.6 கோடி டாலர்கள் உடனடியாக தேவைப்படுவதாக ஐ.நா கூறியுள்ளது. திங்களன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா சபை கூட்டத்தில், 100 கோடி டாலர்கள் அளவுக்கு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிவாரணம் அளிக்க
உலக நாடுகள் உறுதியளித்துள்ளன.



Next Story

மேலும் செய்திகள்