ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 11:45 AM
ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஜெர்மனியின் தலைச்சிறந்த தலைவராகவும், பெண்ணியவாதியாகவும் விளங்கிய ஏஞ்சலா மெர்க்கல் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விடைபெற்றுள்ளார்.இன்னும் 2 வாரங்களில் ஜெர்மனி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகியுள்ளார்.ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக 2005-இல் பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்க்கல், 16 ஆண்டுகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்கிறார்.
நாட்டின் வளர்ச்சியில் மட்டுமின்றி அமைதிக்கான நடவடிக்கைகள், பெண்ணிய செயல்பாடுகள் போன்றவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவர், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எளிமையை கடைபிடித்தார்.அமைதியிழந்த நாடுகளில் இருந்து புகலிடம் தேடி வந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதிலும் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசு முன்னோடியாக விளங்கியது.16 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தும், தனது செல்வாக்கை சுயவாழ்க்கையில் பயன்படுத்தாமல் எளிமையின் அடையாளமாக திகழ்ந்தார் ஏஞ்சலா மெர்க்கல்.அகதிகளுக்கு புகலிடம் வழங்க உலக நாடுகள் தயக்கம்காட்டிய வேளையில் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு கரம் நீட்டினார்.அகதிகளுக்கான வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, "நம்மால் இதை செய்ய முடியும்" எனக்கூறி அதற்கான திட்டங்களை வகுத்ததன் மூலம் அவர் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக கருதப்படும் ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

798 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

97 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

49 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு - ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா இறப்புகள்

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது.

7 views

பெய்ரூட் வன்முறை - 7 பேர் பலி

பெய்ரூட்டில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கிறித்தவ லெபனான் படைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அதற்கு அக்கட்சியின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

8 views

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு - மீண்டும் பூமிக்கு திரும்ப ஆயத்தம்

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு மீண்டும் பூமிக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது.

10 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

9 views

சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் - பெரு நாட்டு அரசு அறிவிப்பு

பெரு நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

10 views

அக். 20இல் ஆப்கன் பற்றி ரஷ்யாவில் மாநாடு - தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

தலிபான் அமைப்பினருடன் ரஷ்யாவில் நடக்க உள்ள பேச்சு வார்த்தைகளில் இந்தியாவும் பங்கேற்க உள்ளது

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.