உலக புகழ்பெற்ற 'மெட் காலா' பேஷன் ஷோ - கண்கவர் ஆடையால் கவர்ந்த பிரபலங்கள்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 08:02 AM
நியூயார்க்கில் நடைபெற்ற புகழ்பெற்ற ஆடை அலங்கார நிகழ்ச்சி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து சிறிய காட்சி தொகுப்பு..
மனதை கவர்ந்த பிரபலங்களின் அழகிய அணிவகுப்பு...கண்களை கவர்ந்த பல்வேறு வகை ஆடைகள்...ஆடையில் அரசியல் பேசிய பிரபலங்கள் என 
உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது நியூயார்க்கில் நிகழ்ந்த மெட் காலா FASHION SHOW...நியூயார்க்கில் உள்ள பிரபல கலை அருங்காட்சியகத்திற்கு நிதி திரட்டுவதற்காக 1948 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி இது.கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று கோலாகலமாக நடத்தப்பட்டது.இதில் அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், பாப் பாடகர்கள் என உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு டிக்கெட்டின் விலை 30,000 அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய். குறிப்பாக டென்னிஸ் நட்சத்திரங்கள் செரினா வில்லியம்ஸ், ஒசாகா, கார் பந்தய வீரர் லீவிஸ் ஹாமில்டன், அமெரிக்க மகளிர் கால்பந்து நட்சத்திரம் மேகன் ரபினோ(Megan Rapinoe), பிரபல ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்(SIMONE BILES) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.இதில் ஒசாகாவின் சிகை அலங்காரமும், செரினா மற்றும் சிமோன் பைல்ஸ்(SIMONE BILES) ஆகியோரது ஆடை அலங்காரம் கவனத்தை ஈர்த்தன...அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நியா டென்னிஸ்(NIA DENNIS), ஜிம்னாஸ்டிக் சாகசத்தில் ஈடுபட்டது ரசிக்கும்படி இருந்தது..இதுஒருபுறம் என்றால் ஹாலிவுட் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ், உலக புகழ் பாடகி ரிஹானா ஆகியோரது வருகை நிகழ்ச்சியை அழகாக்கியது.இந்த நிகழ்ச்சியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தவர்கள் மூன்று பேர்.. உடல் முழுவதையும் மூடியவாறு கருப்பு ஆடை அணிந்து வந்த அமெரிக்க மீடியா புகழ் கிம் கர்டாஷியான் தான் இன்றைய டிரெண்டிங்...(Kim Kardashian),இதைதவிர ரோபோ குழந்தையுடன் வந்திறங்கிய அமெரிக்க பாடகர் பிராங்க் ஓசன்(FRANK OCEAN)பணக்காரர்களுக்கு வரி விதியுங்கள் என்ற வாசகத்துடன் அரசியல் பிரபலம் அலெக்சாண்டியா(Alexandria Ocasio-Cortez) உள்ளிட்டோர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.இணையத்தில் பேசுபொளாகினர்..
தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

36 views

பிற செய்திகள்

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு - மீண்டும் பூமிக்கு திரும்ப ஆயத்தம்

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்த ரஷ்ய குழு மீண்டும் பூமிக்குத் திரும்ப ஆயத்தமாகி வருகிறது.

10 views

கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சி - நடனமாடி மகிழ்வித்த க்ரெட்டா தென்பெர்க்

ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கால நிலை மாற்றம் தொடர்பான இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் க்ரெட்டா தென்பெர்க் நடனமாடி பார்வையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

9 views

சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் - பெரு நாட்டு அரசு அறிவிப்பு

பெரு நாட்டில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

10 views

அக். 20இல் ஆப்கன் பற்றி ரஷ்யாவில் மாநாடு - தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

தலிபான் அமைப்பினருடன் ரஷ்யாவில் நடக்க உள்ள பேச்சு வார்த்தைகளில் இந்தியாவும் பங்கேற்க உள்ளது

7 views

சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட ஹெராயின் - இந்திய மதிப்பில் ரூ.780 கோடிக்கும் அதிகம்

ஆஸ்திரேலியாவில் கப்பலில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 780 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான ஹெராயினை அதிகாரிகள் கைப்பற்றினர்.

12 views

இலைக்குவியலுக்குள் மறைந்திருந்த ரொட்டிகள் - சரியாகக் கண்டு பிடித்த பாண்டா கரடிகள்

ரஷ்யாவின் மாஸ்கோ உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் விளையாடிக் கொண்டே உணவு உண்டு மகிழ்ந்தன.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.