ரஷ்ய அதிபரின் உதவியாளர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுதல் ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
ரஷ்ய அதிபரின் உதவியாளர்களுக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் புடின்
x
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுதல் ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்
தனிமைபடுத்தப்பட்டுள்ளார். 68 வயதான விளாடிமிர் புட்டின், திங்கள் அன்று சிரியா அதிபர் பஷர் அல் அசாதை மாஸ்கோவில் உள்ள கிரெம்லின்
மாளிகையில் சந்தித்தார். பின்னர் ரஷ்ய பாரா ஒலிம்பிக் வீரர்களை சந்தித்த பின், மேற்கு ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பெலரஸ் ராணுவத்துடன் ரஷ்ய ராணுவம் நடத்திய கூட்டுப் போர் பயிற்சிகளை பார்வையிட்டார். அவருடன் பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றுதல் ஏற்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக
கிரெம்லின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். புட்டினுக்கு கொரோனா தொற்றுதல் ஏற்படவில்லை என்றும், அவர் காணொலி மூலம்
தனது பணிகளை தொடர்வதாகவும் அவர் கூறினார்.  இந்த வார இறுதியில் தஜிகிஸ்தான் செல்ல இருந்த புட்டின், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை புட்டின் எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்