ஆப்கானுக்கு 64 மில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 64 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆப்கானுக்கு 64 மில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு
x
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 64 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், ஆப்கான் மக்களின் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி வழங்கும் என தெரிவித்தார். இதன்படி  64 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும் என்றும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க தொடர்ந்து உதவும் எனவும் தெரிவித்தார். ஆப்கான் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக தெரிவித்த ஆண்டனி பிளிங்கன், பாகிஸ்தானுடனான உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்