இரட்டை கோபுரம் தாக்குதல்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

இரட்டை கோபுரம் தாக்குதலில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அமெரிக்காவில் மரியாதை செலுத்தப்பட்டது.
இரட்டை கோபுரம் தாக்குதல்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை
x
 2001இல் நடந்த இரட்டை கோபுரம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயன்றபோது 340 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆர்லாண்டோ தீயணைப்பு வீரர்கள் 110 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் படிகளில் ஏறினர். 

"அமெரிக்கா தங்கள் இலக்கை அடையவில்லை" - அமெரிக்கா மீது தலிபான்கள் குற்றச்சாட்டு

ஆப்கானில் அமைதியை நிலை நாட்டாததால், தங்கள் இலக்கை அமெரிக்கா அடையவில்லை என்று தலிபான்கள் விமர்சித்துள்ளனர்.  2001ஆம் ஆண்டு தலிபான் அரசை வீழ்த்துவதற்காக ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கவில்லை என்றும், அவர்களின் முக்கிய குறிக்கோள்,  சீனா, ரஷ்யா, ஈரான், மற்றும் மத்திய ஆசியாவின் அனைத்து நாடுகளையும் வீழ்த்துவது தான் என்றும் தலிபான் ஜெனரல் தெரிவித்தார். ஆனால் அமெரிக்கர்களால் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். தங்கள் மண்ணை ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.


சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்கள்: பிடிபட்ட நால்வர் இஸ்ரேல் நீதிமன்றத்தில் ஆஜர்

சிறையில் இருந்து தப்பி பிடிபட்ட 6 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இஸ்ரேலிய சிறை ஒன்றிலிருந்து பாலத்தீன கைதிகள் தப்பிச் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இஸ்ரேலிய காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகளை இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தப்பியவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடலாம் என்று இஸ்ரேல் கருதியது. இந்நிலையில் பிடிபட்ட நால்வரையும் இஸ்ரேல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.  





Next Story

மேலும் செய்திகள்