சிறுவர்களை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே வாரத்தில் 2.52 லட்சம் பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவில் சிறுவர், சிறுமியரிடையே கொரோனா தொற்றுதல் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறுவர்களை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே வாரத்தில் 2.52 லட்சம் பேருக்கு பாதிப்பு
x
அமெரிக்காவில் சிறுவர், சிறுமியரிடையே கொரோனா தொற்றுதல் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டெல்டா வைரஸ் பரவல் காரணமாக, அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மத்தியில் கொரோனா தொற்றுதல் வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு தினசரி தொற்றுதல்கள், 1.74 லட்சமாக அதிகரித்துள்ளது. 

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 18 வயதிற்குட்பட்டவர்களிடையே கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
 

அமெரிக்காவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு 
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு
தடுப்பூசி செலுத்த இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை. 

கடந்த வாரத்தில் மட்டும் 2.52 லட்சம் சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தொற்றுதல் ஏற்பட்டதாக, அமெரிக்க குழந்தைகள் நல ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொரோனா நோய் காரணமாக மருத்துவமனைகளில் தினமும் அனுமதிக்கப்படும்
சிறுவர், சிறுமியர்களின் சராசரி எண்ணிக்கை கடந்த வாரத்தில், 369ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசின் நோய்க் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. 

2020 ஆகஸ்ட் முதல் இதுவரை 55,000 சிறுவர், சிறுமியர்கள், கொரோனா
தொற்றுதல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளதாக நோய்க் கட்டுபாடு மையம் கூறியுள்ளது. 

கொரோனாவினால் சிறுவர், சிறுமியர் உயிரிழப்பது மிக அபூர்வமாக நடைபெற்றாலும், இதுவரை அமெரிக்காவில் 520 சிறுவர், சிறுமியர் பலியாகியுள்ளனர். 

புதிதாக ஏற்படும் கொரோனா பாதிப்புகளில் 26 சதவீதம், சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்படுவதாக அமெரிக்க குழந்தைகள் நல ஆய்வு மையம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்