இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க நீதிமன்றத்தில் திங்கள் அன்று வழக்கு விசாரணை
பதிவு : செப்டம்பர் 11, 2021, 02:11 PM
பிரட்டன் ராணியின் இரண்டாவது மகனான இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பிரட்டன் ராணியின் இரண்டாவது மகனான இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

61 வயதான இளவரசர் ஆன்ட்ரூ, பிரட்டன் ராணி எலிசபத்தின் இரண்டாவது மகனும், பட்டத்து இளவரசர் சார்ல்ஸின் இளைய சகோதரரும் ஆவார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre) என்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்தார் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
உள்ள மன்ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 38 வயதாகும் விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre), சிறுமியாக இருந்த போது, லண்டன் நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில், இளவரசர் ஆன்ட்ரூவினால் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre), அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால்,
இந்த வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காணொலி மூலம் ஆஜராகும் படி மன்ஹட்டான் மாவட்ட நீதிமன்றம் அனுப்பிய  
சம்மனை முதலில் வாங்க மறுத்த இளவரசர் ஆண்ட்ரூஸ், பின்னர் அவரின் வழக்கறிஞர்கள் மூலம் இதைப் பெற்றுக் கொண்டதாக விர்ஜீனியா கியூப்ரேவின்(Virginia Giuffre) வழக்கறிஞர் கூறியுள்ளார். வரும் திங்கள் அன்று நடைபெற உள்ள இந்த வழக்கு விசாரணையில் இளவரசர் ஆண்ட்ரூஸ் ஆஜராவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இளவரசர் ஆன்ட்ரூஸ் 1996இல் விவகாரத்து பெற்று, அதன் பிறகு தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

659 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

447 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

80 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

55 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

50 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

38 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் நாடோடி வாழ்க்கை முறை - கொல்லப்பட்ட பெண் பதிவரின் உடல் மீட்பு

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தின் தேசிய பூங்காவில் செப்டம்பர் 19 அன்று கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் உடல், கேபி பெடிடோ என்ற இணைய தள பதிவரின் உடல் தான் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை எப்.பி.ஐ உறுதி செய்துள்ளது.

8 views

கோவிஷீல்டு - இங்கிலாந்து அரசு அனுமதி

சர்வதேச பயணத்திற்கான விதிமுறைகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை இணைத்து இங்கிலாந்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

9 views

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஹாட்ரிக் வெற்றி - கனடா நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனது பிரதமர் பதவியை மீண்டும் தக்கவைத்துள்ளார், ஜஸ்டின் ட்ரூடோ.

10 views

சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி - தடுப்பூசி அளிக்க தயங்கும் பெற்றோர்

அமெரிக்காவின் பைசர் நிறுவனதின் கொரோனா தடுப்பூசி, 5 முதல் 11 வயது சிறுவர், சிறுமியர்களுக்கு பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

12 views

நாடாளுமன்ற தேர்தலில் கனடா பிரதமர் வெற்றி - ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

35 views

பூஸ்டர் டோஸ்; அமெரிக்கா திட்டம் - உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பு

அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.