அழிவை மட்டுமே தந்து சென்ற அமெரிக்கா - அமெரிக்கா மீது குற்றம் சாட்டும் ஆப்கானியர்கள்

கடந்த 20 வருடங்களில் அழிவுகளைத் தவிர அமெரிக்கா வேறு எதையும் தரவில்லை என்று, ஆப்கான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அழிவை மட்டுமே தந்து சென்ற அமெரிக்கா - அமெரிக்கா மீது குற்றம் சாட்டும் ஆப்கானியர்கள்
x
கடந்த 20 வருடங்களில் அழிவுகளைத் தவிர அமெரிக்கா வேறு எதையும் தரவில்லை என்று, ஆப்கான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானிற்குள் அமெரிக்கா நுழைந்ததில் இருந்து கிட்டத்தட்ட 66 ஆயிரம் ஆப்கான் துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக புலம்பெயர வைக்கப்பட்டதாகவும் மக்கள் கவலை தெரிவித்தனர். மேலும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு, அமெரிக்கா எதையும் செய்யவில்லை என்றும், ஒரு பகுதியில் மட்டுமல்லாது 34 மாகாணங்களிலும் அழிவுக்கான செயல்களில் மட்டுமே அவர்கள் ஈடுபட்டதாகவும் ஆப்கானியர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், அமெரிக்கா எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்நாட்டின் சொத்துகளை அழித்து விடுவதாகக் கூறியுள்ளனர்.  ஆப்கானிற்கு உதவ லட்சக்கணக்கில் அமெரிக்கா செலவழித்தாலும், கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை இங்கிருந்து எடுத்துக் கொண்டதாகவும் ஆப்கான் மக்கள் குற்றம் சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்