ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி எதிரொலி - ஜீன்ஸ், டி-சர்ட் விற்பனை கடும் சரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அங்கு பாரம்பரிய உடைகள் விற்பனை முன்பை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி எதிரொலி - ஜீன்ஸ், டி-சர்ட் விற்பனை கடும் சரிவு
x
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அங்கு பாரம்பரிய உடைகள் விற்பனை முன்பை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.  

தற்போது, சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், கடைகள் திறக்கப்பட்டு வணிக நடவடிக்கை நடைபெற்று வருகிறது. 

இதில், கவனிக்கத்தக்க விதமாக, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொதுமக்கள் பாரம்பரிய உடைகளை தேடி வாங்குவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஒருபுறம் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால், மக்களின் வாங்கும் திறன் குறைந்திருந்தாலும், முன்பை விட அதிகமான மக்கள் தங்கள் கடைகளுக்கு வருவதாக, பாரம்பரிய உடைகளை விற்பவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேசமயம், கண்ணைக் கவரும் ஜீன்ஸ், டி-சர்ட் உள்ளிட்ட நவநாகரிக உடைகளை வாங்குபவர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக, வணிகர்கள் கூறுகின்றனர். 

தற்சமயம், கடைகளை திறந்து வைக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக கூறும் அவர்கள், மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை என்றால், கடைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். 

தலிபான்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை தீவிரமாக பின்பற்றுபவர்கள் என்பதால், மக்களிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்