வடகொரியா 73 வது ஆண்டு விழா - முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் கிம் ஜாங்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தமது மனைவியுடன், ப்யோங்யாங்கில் உள்ள முன்னோர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
வடகொரியா 73 வது ஆண்டு விழா - முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் கிம் ஜாங்
x
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தமது மனைவியுடன், ப்யோங்யாங்கில் உள்ள முன்னோர் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். வட கொரியா உருவாகி 73  ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில், இரண்டாம் கிம் சங் மற்றும் இரண்டாம் கிம் ஜாங் ஆகியோரின் சமாதிகளுக்கு சென்றார். பின்னர், காவல்துறையினர், ராணுவத்தினர் அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். நிறைவாக, அவர்களுடன் அதிபர் கிம் ஜாங், புகைப்படம் எடுத்து கொண்டார். 

சர்வதேச திரைப்பட விழா துவக்கம் - படங்களை காண குவியும் திரை நட்சத்திரங்கள்

கனடாவின் டோரண்டோ நகரில் சர்வதேச  திரைப்பட விழா துவங்கியுள்ளது. கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக நடத்தப்படாமல் இருந்த டோரண்டோ திரைப்பட விழா தற்போது பார்வையாளர்கள் உடன் துவங்கியுள்ளது. இந்த விழாவில்  "Dear Evan Hansen" என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை காண Julianne Moore, Amy Adams, Kaitlyn Dever உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள்  வருகை தந்தனர். கனடாவில் தற்போது, கொரோனா தொற்றின் நான்காவது அலை, நிலவி வரும் நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

கண்களை கவரும் நவநாகரீக ஆடை அணிவகுப்பு  - ஒய்யார நடை நடந்த பெண்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நவ நாகரீக ஆடை கண்காட்சி காண்போரை ரசிக்க வைத்தது. கரோலினா ஹெரேரா வடிவமைத்த ஆடைகளை அணிந்த பெண்கள் ஒய்யார நடை நடந்தனர். வெள்ளியன்று துவங்கியுள்ள இந்த பேஷன் ஷோ வருகிற 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்