தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - ஐநா ஊழியர்களுக்கு மிரட்டல்கள்

தலிபான்களின் கைப்பற்றலுக்குப் பிறகு ஆப்கானில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது.
தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கான் - ஐநா ஊழியர்களுக்கு மிரட்டல்கள்
x
தலிபான்களின் கைப்பற்றலுக்குப் பிறகு ஆப்கானில் உள்ள தங்கள் ஊழியர்களுக்கு துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் அதிகரித்து வருவதாக ஐநா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா, தலிபான்களின் பழிவாங்கும் விரோதப் போக்கால், ஐநா கடுமையான கோபம் அடைந்துள்ளதாகவும், மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் தலிபான்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய தலிபான்களின் தலைமைக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஐநா பெண் ஊழியர்கள், அலுவலகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண் துணையின்றி உள்ளே வரக்கூடாது என்று வற்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய ஐநா, தங்கள் பணியாளர்கள் சுதந்திரமாகவும், பாகுபாடின்றியும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்