அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய யுக்திகளை வெளியிடும் பைடன்
டெல்டா வகை கொரோனா அமெரிக்கவில் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ஜொ பைடன், இன்று நோய்க்கட்டுப்பாட்டு திட்டங்களை வெளியிட உள்ளார்.
டெல்டா வகை கொரோனா அமெரிக்கவில் அதிகரித்து வரும் நிலையில், அதிபர் ஜொ பைடன், இன்று நோய்க்கட்டுப்பாட்டு திட்டங்களை வெளியிட உள்ளார். தொற்று எண்ணிக்கையிலும், இறப்பு எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, முக்கிய யுக்திகளைக் கண்டறிந்துள்ள பைடன், அது குறித்த தகவல்களை இன்று வெளியிடுவார் என, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். மேலும், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசியை சாத்தியமாக்குவது என்பது இயலாது என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.
Next Story

