வறட்சியில் சிக்கியுள்ள பிரேசில்: வறண்டு போகும் நீர்நிலைகள்-விவசாயிகள் கலக்கம்

உலகில் விவசாயம் செழித்தோங்கும் நாடுகளில் ஒன்றான பிரேசில் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது. போதிய மழை பெய்யாததால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வறட்சியில் சிக்கியுள்ள பிரேசில்: வறண்டு போகும் நீர்நிலைகள்-விவசாயிகள் கலக்கம்
x
வறட்சியானது அந்நாட்டை பெரும் பொருளாதாரச் சரிவிற்கும் பண வீக்கத்திற்கும் இழுத்துச் செல்கின்றது. 3 மாதங்களுக்கு முன்பு வரை, முழுமையாக நிரம்பியிருந்த பல முக்கிய அணைகளில் நீரின் அளவு அடி மட்டத்திற்குச் சென்று விட்டது. நீர் இல்லாததால், பல நீர் நிலைகளில் மீன்கள் உள்ளிட்டவை உயிர் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கால நிலை மாற்றத்தால், கடுமையான வறட்சியை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்