மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- மெல்ல மெல்ல இயல்பு நிலை..

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோ மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்தார்.
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- மெல்ல மெல்ல இயல்பு நிலை..
x
இது குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மானெவேல் லோபஸ், குரேரோ மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்தார். 1985ம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இது போன்ற இயற்கைப் பேரிடர்களுக்குத் தயாராக இருந்தாலும், திடீர் நிலநடுக்கத்தால் அதிர்ச்சிக்குள்லானதாக அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்