குவைத்தில் டயர்கள் மறுசுழற்சி - டைல்ஸாக மாற்றப்படும் டயர்கள்
பதிவு : செப்டம்பர் 08, 2021, 04:36 PM
குவைத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருக்கும் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4 கோடி டயர்கள் மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.
குவைத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருக்கம் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4 கோடி டயர்கள் மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.

குவைத்தில் அர்ஹியா என்ற பாலைவனப் பகுதி தான் இது. மண் பரப்பு தெரியாத அளவிற்கு, வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட சுமார் 4.2 கோடி டயர்கள் இங்கே குவிக்கப்பட்டுள்ளன. குவைத் முழுவதும் இருந்து பல வருடங்களாக பழைய டயர்கள் இந்த பகுதிக்கு அனுப்ப்பட்டு, திறந்தவெளியில்
கொட்டப்பட்டன.

இவற்றில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளில் வெளியாகும் கரும்புகையினால் பல கிலோ மீட்டர் தூரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களும்  கடுமையான பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், இந்த டயர்கள் அனைத்தையும் சவுதி அரேபியா எல்லைக்கு அருகே உள்ள அல் சலாமி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில், எந்திரங்கள் மூலம் தரையில் பதிக்கும் டைல்ஸாக மாற்றப்படுகின்றன.

எப்ஸ்கோ நிறுவனத்தின் தொழிற்சாலையில், டையர்கள் முதலில் அரவை செய்யப்பட்டு, துகள்களாக மாற்றப்படுகின்றன. 

பின்னர் வேறு சில எந்திரங்கள் மூலம் அந்த துகள்கள், டைல்ஸாக மாற்றப்படுகின்றன. ஆண்டுக்கு 30 லட்சம்
டையர்களை இந்த தொழிற்சாலையில் டைல்ஸாக மாற்ற முடியும் என்று இதன் தலைமை செயல் அதிகாரி அலா ஹாசன் கூறுகிறார். 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய டையர்களை, நுகர்பொருளாக மாற்றுவதன் மூலம் இந்தத் தொழிற்சாலை, சமூதாயத்திற்கு பெரும் நன்மையை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.

அல் சலாமி பகுதி டையர்களை மறுசுழற்சி செய்யும் மையமாக உருவெடுக்கும் என்று குவைத் அரசு எதிர்பார்க்கிறது. 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில் மொத்தம் 24 லட்சம் வாகனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

410 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

31 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

13 views

பிற செய்திகள்

வரலாறு படைத்த 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் - 4 பேருடன் விண்வெளி சுற்றுலா

விண்வெளி வீரர்கள் அல்லாத 4 பேரை விண்ணுக்கு அனுப்பி 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் வரலாறு படைத்துள்ளது. இந்த சாதனை பயணத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

8 views

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி - தலிபான், ஹக்கானி நெட்வொர்க் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்திருக்கும் தலிபான், ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

8 views

ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட தென்கொரியா - நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை

தென்கொரியா முதன் முதலாக, கடலுக்கடியில் இருந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.

22 views

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - தனிமையைப் போக்க வித்தியாசமான முயற்சி

இந்தோனேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சூப்பர் ஹீரோக்களைப் போல் உடையணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

7 views

அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

9 views

தைவானை அச்சுறுத்தும் சீனா - போர் பயிற்சியில் தைவான் ராணுவம்

தைவானில் நெடுஞ்சாலை ஒன்றில் போர் விமானங்களை தரை இறங்கச் செய்து, போர் ஒத்திகை நடத்தப்பட்டது. விறுவிறுப்பும், பரபரப்புமாய் காட்சியளித்த

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.