ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பாகிஸ்தான் எதிர்ப்பு போராட்டம்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரம் அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் பாகிஸ்தான் எதிர்ப்பு போராட்டம்
x
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரம் அடைந்துள்ளது. காபூல் சாலையில் சாரை, சாரையாக செல்லும் இவர்கள், பாகிஸ்தான் தூதரகத்தையும், அந்நாட்டு உளவுத்துறை தலைவர் பயாஸ் ஹமீது இருக்கும் ஹோட்டலையும் முற்றுகையிட சென்றவர்கள்.

ஆப்கானிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும்; பாகிஸ்தான் மீது பொருளாதார தடையை விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் மீதான தங்களுடைய கோபத்தை கோஷமாக வெளிப்படுத்தினர்.

பஞ்சஷீரை பாகிஸ்தான் அழித்தது ஏன்...? மக்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும், அமைதியாக இருக்க கூடாது. பாகிஸ்தான் என் தாய் நாட்டை அழித்துவிட்டது. பாகிஸ்தானுக்கோ, தலிபானுக்கோ, அல்-கொய்தாவுக்கோ இங்கு உரிமையில்லை. எங்களது எதிர்ப்பு தொடரும்.

பாகிஸ்தான் தங்கள் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும். பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி இங்கு இருக்க கூடாது. பாகிஸ்தான் இங்கு வரவும் பிரச்சினையும், இன அழிப்பும் வந்துவிட்டது. நாங்கள் இதனை அனுமதிக்க மாட்டோம், பாகிஸ்தான் இங்கிருந்து வெளியேற்ற வேண்டும்

இவர்கள் மட்டுமல்ல ஆப்கான் ஜனநாயக விரும்பிகள் அனைவரும் பாகிஸ்தான் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். 2001 ஆம் ஆண்டு ஆப்கானில் அமெரிக்கா போர் தொடுத்த போது பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்கிய பாகிஸ்தான், இன்று தலிபான்கள் ஆட்சியமைக்க உதவிசெய்வதாக அங்கு மையமிட்டுள்ளது. ஆனால் மக்களோ அவர்களை கடுமையாக எதிர்க்கிறார்கள். 

பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை, தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியுள்ளனர். தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற கோஷத்தை வெளிப்படையாக எழுப்பும் பெண்கள், தலிபான்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

எங்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்.  தலிபான்கள் அநீதியை மட்டும் இழைப்பவர்கள், மனிதநேயம் இல்லாதவர்கள். எங்களை போராட அனுமதிக்கவில்லை. 

ஆப்கானில் காபூல் மட்டுமின்றி ஹீராட், மசாரி-ஐ-சாரிப் உள்ளிட்ட பிற இடங்களிலும் சுதந்திரம் கோரிய மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.  இதற்கிடையே ஆப்கான் விவகாரத்தில் தலையீடும் பாகிஸ்தானை விமர்சனம் செய்திருக்கும் ஈரானும், அங்கு தேர்தலை நடத்த வலியுறுத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்