தலிபான், சீனா உறவு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

சீனா, தலிபான்களுடன் இணைந்து சில திட்டங்களை செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
தலிபான், சீனா உறவு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
x
சீனா, தலிபான்களுடன் இணைந்து சில திட்டங்களை
செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். தலிபான் அமைப்புக்கு, சீனா நிதி உதவி அளிப்பது குறித்து கருத்து தெரிவித்த ஜோ பைடன், தலிபான்களுடன் சீனாவுக்கு சில பிரச்சினைகள் உள்ளதாகவும், அதன் காரணமாக தலிபான்களுடன் சீனா சில ஒப்பந்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும் தலிபான்களுடன் இணைந்து செயல்படும் என கருத்து தெரிவித்த பைடன், தலிபான் விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளதாக கூறினார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கனிம சுரங்கங்களை அமைக்க சீனாவுக்கு தலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்திக்கு தேவையான கனிமங்களை ஆப்கானிஸ்தானில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது.

இதேபோல், சீனாவின் முக்கியப் பகுதிகளை பாகிஸ்தான் துறைமுகங்களுடன் இணைக்கும் பொருளாதார வழித்தட திட்டத்தில் சேர தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்