காபூலில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் - கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்க தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது.
காபூலில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் - கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி சூடு
x
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்க தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள், தலிபான்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் குதித்தனர். தலிபான்கள் மீண்டும் ஆட்சியில் அமர பாகிஸ்தான் உதவி புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், "பாகிஸ்தானிற்கு அழிவு" என்பது போன்ற முழக்கங்களுடன் மக்கள் போராடினர். காபூல் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக் காரர்களை விரட்டியடிக்க தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்