'ஸ்பூனால்' சுரங்கம் தோண்டி 6 கைதிகள் தப்பி ஓட்டம்

இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் 'ஸ்பூனால்' சுரங்கம் தோண்டி 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பூனால் சுரங்கம் தோண்டி 6 கைதிகள் தப்பி ஓட்டம்
x
இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பு நிறைந்த சிறையில் 'ஸ்பூனால்' சுரங்கம் தோண்டி 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் கில்போவா சிறையில், வாஷ் பேஷன் அடியில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்யும் இந்த துளைதான் சிறைக்கைதிகளால் தோண்டப்பட்ட சுரங்கமாகும்.

சிறைக்கு வெளிப்புறம் வரையில் செல்லும் இந்த சுரங்கம் வழியாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உள்பட 6 பேர் தப்பி சென்றுவிட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.  

சுரங்கத்திலிருந்து கைதிகள் தப்பியோடிய போது பார்த்த விவசாயிகள், தகவல் கொடுத்த போதுதான் இச்சம்பவம் போலீசாருக்கே தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

சுரங்கத்தை ஆச்சர்யமாக பார்க்கும் அதிகாரிகள், தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடப்பதாக கூறியிருக்கிறார்கள். 

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையையொட்டிய சிறையிலிருந்து தப்பிக்க வெளியிலிருந்தும் உதவி கிடைத்துள்ளது எனக் கூறியிருக்கும் இஸ்ரேலிய சிறை அதிகாரிகள், இது மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்வியெனக் கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே காசா, மேற்கு கரை பகுதியில் சிறைக்கைதிகள் தப்பியதை பாலஸ்தீனியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.  

உலகிலேயே நவீன பாதுகாப்பு கட்டமைப்புக்கு முன்மாதிரியாக இருக்கும் இஸ்ரேல் சிறையில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில் கைதிகள் வெறும் ஸ்பூனால் சுரங்கத்தை தோண்டி தப்பிய விவகாரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்