தலிபான்கள், ஹக்கானி மோதல் - காயமடைந்த தலிபான் தலைவர்

ஆப்கானிஸ்தானை கைபற்றியுள்ள தலிபான் குழுவினருக்கும், அவர்களின் தோழமை அமைப்பான ஹக்கானி அமைப்பிற்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது
தலிபான்கள், ஹக்கானி மோதல் - காயமடைந்த தலிபான் தலைவர்
x
தலிபான்களின் தலைவரான ஹைபத்துல்லா அக்குன்ஸ்டாவை தேசியத் தலைவராக ஏற்க ஹக்கானி அமைப்பினர் மறுப்பதே, இந்த மோதலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே, தலைநகர் காபூலில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீத், காபூலுக்கு விரைந்துள்ளார்.  இரு தரப்பினருக்கும் இடையே சமதானத்தை ஏற்படுத்தி, புதிய ஆப்கன் அரசை உருவாக்க அவர் தீவிர முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செப்டம்பர் 3ஆம் தேதி, புதிய அரசு அமைக்கப்படும் என்று தலிபான்கள் கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில், இன்று வரை புதிய அரசு பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்