அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - 3 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மூன்று மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு - 3 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலி
x
துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. ஞாயிறு அன்று புளோரிடா மாகாணத்தின் போல்க் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த 33 வயதான முன்னாள் ராணுவ வீரர் பிரையன் ரைலி, கண் மூடித்தனமாக சுட்டதில், மூன்று மாத குழந்தை ஒன்றும், அதன் பெற்றோர்களும் கொல்லப்பட்டனர். பின்னர் பக்கத்து வீட்டில் நுழைந்த ரைலி, அங்கு ஒரு 62 வயதான பெண்மணியை சுட்டுக் கொன்றார். குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்த பிரையன் ரைலி மீது காவல்த்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் காயமடைந்தார். பின்னர், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, காவல் துறையினரிடம் சரணடைந்த ரைலி, கைது செய்யப்பட்டார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ரைலி, போதை மருந்து உட்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கெடுத்த ரைலி, பின்னர் ராணுவத்தில் இருந்து வெளியேறி, புளோரிடா மாகாணத்தில் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்தத் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்