"பெண் சுதந்திரம் வேண்டும்" - கோரிக்கை விடுக்கும் ஆப்கான் பெண்கள்
தலிபான்கள் கைப்பற்றலுக்கு முன்பிருந்த அதே சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலிபான்கள் கைப்பற்றலுக்கு முன்பிருந்த அதே சுதந்திரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் பறிபோய் விட்டதாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அஷ்ரஃப் கனி ஆட்சியின் போது தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரம், தலிபான்கள் ஆட்சியிலும் வழங்கப்பட வேண்டும் என்று ஆப்கான் பெண்கள் கருத்து தெரிவித்தனர். கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
Next Story

