அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 3 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலி
பதிவு : செப்டம்பர் 06, 2021, 03:17 PM
அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மூன்று மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. ஞாயிறு அன்று புளோரிடா மாகாணத்தின் போல்க் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த 33 வயதான முன்னாள் ராணுவ வீரர் பிரையன் ரைலி, கண் மூடித்தனமாக சுட்டதில், மூன்று மாத குழந்தை ஒன்றும், அதன் பெற்றோர்களும் கொல்லப்பட்டனர். பின்னர் பக்கத்து வீட்டில் நுழைந்த ரைலி, அங்கு ஒரு 62 வயதான பெண்மணியை சுட்டுக் கொன்றார். குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்த பிரையன் ரைலி மீது காவல்த்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் காயமடைந்தார். பின்னர், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, காவல் துறையினரிடம் சரணடைந்த ரைலி, கைது செய்யப்பட்டார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ரைலி, போதை மருந்து உட்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் பங்கெடுத்த ரைலி, பின்னர் ராணுவத்தில் இருந்து வெளியேறி, புளோரிடா மாகாணத்தில் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக
பணியாற்றி வந்தார். இந்தத் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது

தொடர்புடைய செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்ட தலிபான் எதிர்ப்பாளர்கள்: "தலிபான்களுக்கு எதிராக போராட தயார்"

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் உள்ள கோட்டல் ஈ அஞ்சுமான் மலைப்பாதையில் தலிபான் எதிர்ப்பாளர்கள், பயிற்சியில் ஈடுபட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

112 views

"தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்கள் நலன் முக்கியம் என்பதால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

73 views

இந்திய ஹாக்கி சூப்பர்ஸ்டார் ஸ்ரீஜேஷ் - வெண்கலம் வெல்ல முக்கிய காரணம்

ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது சாதனை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

58 views

சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு: விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த‌தாக அறிவிப்பு

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மேலும் 25 ரூபாய் உயர்த்தி, எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

26 views

பிற செய்திகள்

வணிக வரியில் 1.18% வளர்ச்சி- கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டின் வணிக வரித்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 views

"முதல்வர் அறிவிப்பால் நெகிழ்ந்த நெஞ்சம்" - பேரவையில் அவை முன்னவர் துரைமுருகன் பெருமிதம்

சமூக நீதி நாள் அறிவிப்பை வரவேற்று பேசிய அவை முன்னவர் துரைமுருகன், திராவிட தாக்கத்தோடு முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால், எனது நெஞ்சம் நெகிழ்ந்துள்ளது என்றார்.

7 views

"தற்போது, அதிமுக கூட்டணியில் இல்லை" - ஜான்பாண்டியன்

தனது இல்லத் திருமணத்துக்கு வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தற்போது இல்லை என்றார்.

3 views

சமூக நீதி நாள்- எதிர்க்கட்சிகள் வரவேற்பு

பெரியார் பிறந்தநாள் குறித்த முதலமைச்சரின் அறிவிப்புக்கு அதிமுக, பாஜக பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

5 views

சமூக நீதி நாள்- உறுப்பினர்கள் வரவேற்பு

பெரியாரின் பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை தற்போது பார்ப்போம்..

7 views

ஆப்பிரிக்க நாடான கினியாவில் ராணுவ புரட்சி: அதிபர் சிறைப்பிடிப்பு- ஆட்சியை பிடித்த ராணுவம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் அதிபரை சிறைப்பிடித்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.